முதலில் மனிப்பு கேட்டு கொள்கிறேன். வேலை பளு அதிகம் இருந்ததால் தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது. இனிமேல் முடிந்த அளவு எழுத முயற்சிக்கிறேன்.
என்னுடைய நண்பனுக்கு அந்த சிலிண்டர் கடைசி வரை கிடைக்கவே இல்லை. ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வந்து அந்த "பேக்கர்ஸ் அண்ட் மூவேர்ஸ்" இருந்த முகவரிக்கே சென்றான். அங்கு அதிர்ச்சி. அப்படி ஒரு கம்பனியே அந்த முகவரியில் இல்லை. பிறகு அதே கைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட பொழுது அதே நபர் பேசி இருக்கிறான். என்னுடைய நண்பன் அவர்களுடைய முகவரியை கேட்டவுடன் இணைப்பை துண்டித்து விட்டான். பிறகு வேறு ஒரு தொலைபெசியில் இருந்து இவனுடைய நண்பனை பேச வைத்திருக்கிறான். அந்த நபர், நீங்கள் எத்தனை முறை முயற்சி செய்தாலும் அந்த சிலிண்டர் உங்களுக்கு கிடைக்காது. தயவு செய்து இன்னொரு முறை இந்த எண்ணில் அழைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டானாம். யார் மீது வழக்கு தொடுப்பது என்று கூட தெரியாத அளவுக்கு ஏமாற்ற பட்டு இருக்கிறான் என்னுடைய நண்பன்.
"பேக்கர்ஸ் அண்ட் மூவேர்ஸ்" உதவியை நாடும் பொழுது உண்மையில் அவர்களக்கு ஒரு அலுவலகம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டு பிறகே வேலையை ஒப்படையுங்கள்.
No comments:
Post a Comment