உனக்கு ஹிந்தி தெரியுமா. இப்படி இப்படி கேட்டான் ஒரு நண்பன் (பெயர் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்). தெரியும் என்ன விஷயம் என்று கேட்டேன். இன்று ஒரு பிரச்சனை, சம்பந்தபட்ட ஆள் ஹிந்தியில் மட்டுமே பேசுகிறான். பேசி என்ன விஷயம் என்று கேட்டு சொல்லு என்றான்.
விஷயம் இதுதான்
என்று என் நண்பன் சென்னையில் இருந்து பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறான். உடமைகளை இடம் பெயர்ப்பதற்கு "அகர்வால் பாக்கெர்ஸ் & மூவர்ஸ்" அணுகி இருக்கிறான். நேற்று இங்கு பொருட்களை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு இவன் பெங்களுரு சென்றுவிட்டான். இன்று காலை அங்கு வண்டி வந்து சேர்ந்தவுடன் அதிர்ச்சி. வண்டியில் GAS CYLINDER காணவில்லை. ஓட்டுனரை கேட்டதற்கு Check Postல் பிடித்து கொண்டார்கள். 10000 ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாக சொன்னார்கள், என்று கூறி இருக்கிறான்.
இவன் 45 km பயணம் செய்து Check Postல் விசாரித்திருக்கிறான். அவர்கள், இன்று அப்படி நாங்கள் யாரிடமும் பறிமுதல் செய்ய வில்லை. அப்படி செய்து இருந்தால் நாங்கள் ஒரு இரசீது குடுத்து இருப்போம் என்று கூறி இருக்கிறார்கள்.
இவன் அந்த ஓட்டுனரிடம் கேட்டல், எனக்கு தெரியாது என்று கூறி இருக்கிறான். சிறிது நேரத்தில் அந்த ஓட்டுனரின் முதலாளி இவனுடன் பேசி இருக்கிறார். இனிமேல் எங்களுடைய ஓட்டுனரை அழைத்து தொந்தரவு செயாதீர்கள். அகர்வால் கம்பெனியில் என்ன சொல்ல சொனர்களோ அதை சொல்லிவிடோம். இனிமேல் பேச வேண்டும் என்றால் நீங்க அகர்வால் கம்பெனி கார்களிடம் பேசுங்க என்று சொல்லியிருகிறார்.
இவன் அகர்வால் கம்பெனிக்கு கூபிட்டால் ஹிந்தியில் பேசியிருகிறார்கள். இவன் எனக்கு ஹிந்தி தெரியும் என்ற காரணத்தால் என்ன பேச சொல்லி அழைத்து இருக்கிறான். உங்களுக்கு Cylinder கிடைக்கவில்லை என்றால் நாங்கள் நஷ்ட ஈடு 1000 ரூபாய் குடுக்கிறோம் என்று சொல்லியிருகிறார்கள்.
நானும் பேசினேன். எனிடமும் அதே கதையை சொன்னார்கள். பிறகு நாளை காலை வரை நேரம் குடுங்கள், நாங்கள் விசாரித்து கண்டுபிடுத்து குடுக்கிறோம் என்று சொல்லியிருகிறார்கள்.
நாளை என்ன நடக்கிறது. பொறுத்திருந்து பார்போம்.
No comments:
Post a Comment